» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செர்பியாவில் நிலம் வாங்க வைத்திருந்த ரூ.16 லட்சம் பணத்தை தின்று தீர்த்த ஆடு

வியாழன் 6, டிசம்பர் 2018 8:34:38 PM (IST)

செர்பியா நாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை, ஆடு ஒன்று தின்று தீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே உள்ள கிராமம் ரனிலோவிக். இங்கு சிமிக் இனக் குடும்பம் ஒன்று விவசாயம் செய்து வருகிறது. இவர்கள் புதிதாக 10 ஹெக்டேர் நிலத்தை வாங்கி, தங்கள் குடும்ப விவசாயத்தை விரிவாக்க திட்டமிட்டிருந்தனர். 

நிலம் வாங்குவது தொடர்பாக, விற்பனையாளரைச் சந்திக்க குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர். அப்போது நிலம் வாங்கத் தேவையான பணத்தை டேபிளில் வைத்து விட்டு, கதவை மூடாமல் சென்றார்களாம். அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு டேபிளில் இருந்த பணத்தைக் கண்டது. கடுமையான பசியில் இருந்த ஆடு, பணக் கட்டுகளை கடித்து தின்றுள்ளது. 

வீடு திரும்பிய விவசாயக் குடும்பத்தினர், பணத்தின் எஞ்சிய துண்டுகள் கீழே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது, ஆடு ஒன்றின் வாயில் சில ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த ரூ.16 லட்சம் பணத்தையும் ஆடு தின்று தீர்த்துள்ளதை அறிந்தனர். இதனால் அந்த குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory