» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொதுமக்கள் போராட்டத்துக்கு பணிந்த பிரான்ஸ் அரசு : வரியைக் குறைக்க முடிவு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 2:06:08 PM (IST)

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நிலையில், வரியைக்குறைக்க பிரான்ஸ் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை குறிப்பிட்ட சதவிகிதம் பிரான்ஸ் அரசு உயர்த்தியது. முதலில் சமூக வலைதளங்கள் மூலமாக தொடங்கிய அரசுக்கு எதிரான பிரசாரம், போராட்டமாக மாறியது. பாரீஸ் உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் திரண்டு வந்து அரசுக்கு எதிராக போராடி வந்தனர்.மூன்று வாரங்களாக நடந்த போராட்டம் சில நாட்களில் வன்முறையாக மாறியது. யெல்லோ வெஸ்ட் என்ற எதிர்ப்பு குழுவினர் பெயரில் நடந்த போராட்டத்தில் பாரிஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் கார்கள், கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. 

வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், கடைகளில் பொருட்கள் சூறையாடப்பட்டன. விலையுயர்ந்த பொருட்கள் கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.நெருக்கடி நிலையை அமல்படுத்த அரசு முடிவுக்கு வந்த அளவுக்கு மோசமான சூழல் நிலவியது.3 பேர் பலியான நிலையில், சர்வதேச அளவில் இவ்விவகாரம் பேசப்பட்டதால் வேறு வழியின்றி பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க முடிவுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education

New Shape Tailors


Joseph Marketing

Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory