» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய சீனா சம்மதம்: டிரம்ப் தகவல்

திங்கள் 3, டிசம்பர் 2018 12:40:06 PM (IST)

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையில் வரிவிதிப்பு வர்த்தகப் போர் மூண்டது. சீனாவும் அமெரிக்கா மீது ஏராளமான வரிகளை அறிவித்தது. 

இதற்கு பதிலடியாக சீனா மீது பல்வேறு பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான வரிகளை டிரம்ப் சமீபத்தில் சுமத்தினார். இந்த வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க சீன அரசு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications



Joseph Marketing


CSC Computer Education

New Shape Tailors

Black Forest Cakes



Thoothukudi Business Directory