» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா வந்தால் எனது உயிருக்கு ஆபத்து : அமலாக்கதுறைக்கு நீரவ் மோடி கடிதம்

சனி 1, டிசம்பர் 2018 7:23:43 PM (IST)

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும அவரது உறவினர் மெஹுல் ஜோக்சி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், நீரவ் மோடி அதற்கு முன்பாகவே நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து, நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. நீரவ் மோடி அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், சம்பளம் தரப்படாத தனது முன்னாள் ஊழியர்கள், வாடகை தரப்படாத பில்டிங் உரிமையாளர்கள், சிபிஐ பறிமுதல் செய்த நகைகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் மற்ற ஏஜென்சிகளும் நபர்களுடம் தனக்கு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனது உருவப் பொம்மைகளை மக்கள் எரிப்பதாகவும், குறிப்பிட்டுள்ள நீரவ் மோடி, எனவே இந்தியாவிற்கு வரமுடியாது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing


CSC Computer Education


Anbu CommunicationsThoothukudi Business Directory