» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் காலமானார்

சனி 1, டிசம்பர் 2018 3:20:32 PM (IST)

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்  நேற்று இரவு காலமானார்.  

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ், இன்று காலமானதாக, அவரது குடும்பம் தகவல் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 94. இது குறித்து ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ்ஷின் மகனும் அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜார்ஜ் டபுள்யூ புஷ், ட்விட்டர் மூலம் தெரிவிக்கையில், ‘நான், ஜெப், நீல், மார்வின், டோரா மற்றும் நான், 94 ஆண்டு கால பெரு வாழ்வை முடித்துக் கொண்டார் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  அவரது ட்வீட்டில் மேலும், ‘ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ், மிகவும் மாண்போடும் மரியாதையோடும் வாழ்க்கையை வாழ்ந்தவர். எங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அப்பா அவர் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய மனைவி பார்பரா புஷ் (73) இறந்து சரியாக 8 மாதத்துக்குள்ளாக புஷ் மரணமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க கப்பல்படையில் கடந்த 1944-ல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1989 முதல் 1993 வரை மிக நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். இடையில் 1980 முதல் இருமுறை அமெரிக்க துணை அதிபராகவும் இருந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory