» செய்திகள் - விளையாட்டு » உலகம்

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை!!

சனி 1, டிசம்பர் 2018 11:27:28 AM (IST)12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸ் நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அர்ஜெண்டினா சென்றுள்ள  பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்  உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர்,  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் முத்தரப்பு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளை குறிப்பிட்டு  JAI என்றால் இந்தியில் வெற்றி என்று அர்த்தம் என தெரிவித்திருந்தார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் மற்றொரு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்றார். RIC என்றழைக்கப்படும் ரஷியா, இந்தியா, சீனா நாட்டின் இந்த கூட்டமைப்பின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதன் பின்னர் மூன்று நாட்டு தலைவர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஆலோசிக்காத நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Black Forest CakesAnbu Communications

Joseph Marketing
Thoothukudi Business Directory