» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெரும்பான்மை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி : இலங்கை அதிபர் சிறிசேனா அறிவிப்பு

சனி 1, டிசம்பர் 2018 10:56:57 AM (IST)

பெரும்பான்மை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி வழங்க தயார் என்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

ஆனால் உச்சநீதிமன்றம் அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். 

விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார். இதனால், இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சம் அடைந்துள்ளது. இநநிலையில், வரும் 5 ஆம் தேதி அந்நாட்டு பாராளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. அப்போது ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க தயார் என்று சிறிசேனா தெரிவித்து இருப்பதாக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Anbu Communications


New Shape Tailors


Black Forest Cakes

CSC Computer Education



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory