» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அர்ஜெண்டினாவில் சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வெள்ளி 30, நவம்பர் 2018 12:06:17 PM (IST)



ஜி-20 மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது, இருநாட்டு பொருளாதார உறவை மேலும் ஊக்கப்படுத்துதல், கலாச்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் உறவை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.  தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். 

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் நடைபெற்ற சந்திப்பு  பயனுள்ள வகையில் இருந்தது. இந்தியா - சவூதி அரேபியா இடையேயான உறவுகள்  மற்றும் பொருளாதாரத்தை மேலும் ஊக்கப்படுத்துதல் கலாச்சாரம் மற்றும் எரிசக்தி துறை ஊக்கப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்டர்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும்  பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals

New Shape Tailors





Thoothukudi Business Directory