» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் : ஐ.நாவுக்கு 142 நாடுகள் ஆதவு

ஞாயிறு 18, நவம்பர் 2018 5:24:00 PM (IST)மியான்மரில்  ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன.

ஐ.நா. பொது சபையின் மனித உரிமைகள் குழுவில், இஸ்லாமிய நாடுகள் அடங்கிய அமைப்பின் சார்பாக இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அத்துடன் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் நடத்திய வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் அடங்கிய அறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது.  இந்த தீர்மானத்தில், மியான்மர் ராணுவ அரசால் ரோஹிங்கயாக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், அதனால் நாட்டை விட்டு வெளியேறிய 7.23 லட்சம் மக்களின் நிலைக்காகவும் கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பாகுபாட்டினை உடனடியாக நிறுத்துமாறு மியான்மர் அரசை வலியுறுத்தியதுடன், அவர்களுக்கு முறையான குடியுரிமையை வழங்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதையடுத்து அதிகபட்ச பெரும்பான்மையுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சபையில், 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் 26 நாடுகள் கலந்து  கொள்ளவில்லை. 11 லட்சம் ரோஹிங்கயாக்களை அகதிகளாகக் கொண்டுள்ள வங்கதேசம் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான சீனா, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இதனிடையே, இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக துருக்கி வெளியுறவு தூதர் பேசுகையில்,  மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக வன்முறை நடைபெற்று வருகிறது. 2017-ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் அதற்கு ஒரு உதாரணம்தான். இந்த பிரச்னையை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டுமே, இதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார்.இந்நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று மியான்மர் விமர்சித்துள்ளது.

மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்கயா முஸ்லீம்கள் வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் மியான்மரின் பூர்வ குடிகள் இல்லை என்றும் அந்நாட்டில் பல ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ரோஹிங்கயாக்கள் அதிகமாக வசிக்கும் ராகைன் பகுதியில் அவர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்திலும், இந்தியாவிலும் அகதிகளாக குடியேறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Joseph MarketingNew Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory