» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானில் சபஹார் துறைமுகப்பணிகள் மேற்கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா!!

புதன் 7, நவம்பர் 2018 5:49:12 PM (IST)

ஈரானில் சபஹார் துறைமுகப்பணிகள் மேற்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 5ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத மிக கடுமையானது என்று கூறப்படுகிறது. இதுவரை இல்லாத மிகக் கடுமையான இந்தப் பொருளாதாரத் தடையால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கனை இணைக்கும் ரயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, ”நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா சில அனுமதியை வழங்கி உள்ளது. ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory