» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துபாயில் நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை

புதன் 7, நவம்பர் 2018 10:56:24 AM (IST)

துபாயில் நிரவ் மோடியின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.

நிரவ்மோடியின் கீதாஞ்சலி குரூப் கம்பெனிகள் செய்த இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை, நோட்டீஸ் அனுப்பியும், ஆஜராகவில்லை. இந்நிலையில், துபாயில் நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



CSC Computer Education


Anbu Communications

New Shape Tailors


Black Forest Cakes



Thoothukudi Business Directory