» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு: சவுதியில் ஒருவர் பலி; 11 பேர் படுகாயம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 4:21:44 PM (IST)



சவுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை வீச்சில் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏமனில் அதிபர் அப்துரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டு, மார்ச் மாதம் 19–ம் தேதி முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. கடுமையான வான்தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.

இதற்கு பழிவாங்கும் விதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப காலமாக சவுதி மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் தொழில் நகரமான ஜிஜானை குறிவைத்து ஏவுகணை வீச்சு நடத்தினார்கள். அந்த ஏவுகணையை சவுதியின் வான் பாதுகாப்பு சாதனம் வழிமறித்து அழித்தது. அந்த ஏவுகணை சிதறல்கள் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதில் ஒருவர் பலி ஆனார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை சவுதி கூட்டுப்படையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





Thoothukudi Business Directory