» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுவர் கட்டுவேன் என எங்களை யாரும் மிரட்ட முடியாது: அமெரிக்காவுக்கு மெக்சிக்கோ பதிலடி!

செவ்வாய் 7, ஆகஸ்ட் 2018 12:48:57 PM (IST)

மெக்சிக்கோ நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ள மேனுவல் லோபஸ் ஓபரேடர், சுவர் கட்டுவேன் என்று கூறி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, மெக்சிக்கோவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கானவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அவர்கள் குற்றவாளிகள். அவர்களைத் தடுக்க, மெக்சிக்கோ- அமெரிக்க எல்லையில் சுவர் கட்ட வேண்டும். அதற்கு மெக்சிக்கோ நாடே நமக்கு நிதி உதவி செய்யும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இதுவரை அவரது திட்டம் நிறைவேறவில்லை. மேலும், அமெரிக்கா- மெக்சிக்கோ நாடுகளுக்கு இடையிலான உறவிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி, லோபஸ் ஓபரேடரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ மெக்சிக்கோ சென்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். அப்போது, எல்லையில் சுவர் எழுப்புவது குறித்து ஒரு சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதன் பிறகும் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் இரு நாடுகளும் முரண்பாடான கருத்தையே கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மெக்சிக்கோவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள ஓபரேடர், சுவர் எழுப்புவேன் என்று கூறி எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. மெக்சிக்கோ ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கப் போகிறது. அது அரசியல் தலையெழுத்தை மாற்றி எழுதும். இது எப்படி சாத்தியமாகும் என்றால், மெக்சிக்கோ வளர்ச்சியடைய உள்ளது. இங்கு வேலை வாய்ப்பு பெருக்கப்படும் என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education



Anbu Communications

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Joseph Marketing




Thoothukudi Business Directory