» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேஷியாவின் 7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்!

ஞாயிறு 5, ஆகஸ்ட் 2018 8:44:11 PM (IST)

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அது ரிக்டர் அளவுக்கோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7 என்று பதிவாகியிருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்திலேயே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலோரம் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

"மக்கள் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம், உயரமான பகுதிகளுக்குச் செல்லவும் அமைதியாக இருக்கவும் பதற்றம் வேண்டாம்” என்று புவியியல், வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் த்விகோரிட்டா கர்ணாவடி உள்ளூர் தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம்தான் இதே பகுதியில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதில் 12 பேருக்கும் மேல் உயிரிழந்து ஏகப்பட்ட பேர் காயமடைந்தனர். சுமார் 100 கட்டிடங்கள் கடும் சேதமடைந்தன. 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing







Thoothukudi Business Directory