» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை: தாய்லாந்து மீது சீனா விமர்சனம்!!

வியாழன் 12, ஜூலை 2018 5:02:50 PM (IST)

குகையில் சிக்கிய சிறுவர்கள் சிக்கிய விவகாரத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என சீனா விமர்சித்துள்ளது. 

தாய்லாந்தில் கடந்த வியாழக்கிழமை  புக்கெட் தீவுப் பகுதியில் படகில்  120 சீன சுற்றுலா பயணிகள் சென்ற படகு  கவிழ்ந்ததில் இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இன்னும் பலர் மாயமாகியுள்ளனர் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவே தாய்லாந்து மீதான சீன அரசின்  விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது.

தாய்லாந்து அரசின் பொறுப்பற்ற தன்மையினால் இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் அந்நாட்டின் நெட்டிசன்களும், சீனா செய்தித்தாள்களும் தாய்லாந்து அரசை விமர்சித்து வருகின்றனர்.சீன நெட்டிசன்கள் பலர் "தாய்லாந்து கால்பந்து சிறூவர்கள் மீட்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சித்தான் ஆனால் நாங்கள் இனி தாய்லாந்து செல்ல மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.

சீன அரசின் தேசிய பத்திரிகை  கூறும்போது, ”இது ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை தாய்லாந்து வழங்கவில்லை” என்றும் கூறியுள்ளது. தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் நாடுகளில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 10 லட்சம் சீன மக்கள் தாய்லாந்துக்கு வருடந்தோறும் சுற்றுலா செல்கின்றனர்.  இந்த நிலையில் புக்கெட் படகு விபத்து சீனா - தாய்லாந்து இரு நாடுகளில்  நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors





Joseph Marketing

crescentopticals






Thoothukudi Business Directory