» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது அவரது டிரைவர் பரபரப்பு புகார்

செவ்வாய் 10, ஜூலை 2018 1:34:28 PM (IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கார் டிரைவராக  நோயல் சின்ட்ரன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்தார். இந்த நிலையில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3,300 மணி நேரம் ஓவர் டைம் பணி பார்த்து இருக்கிறேன். ஆனால் அதற்கான சம்பளம் தரவில்லை  எனவே மணிக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 20 லட்சம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதற்கிடையே டிரைவர் நோயல் சின்ட்ரனின் குற்றச் சாட்டை டிரம்ப் நிறுவனம் மறுத்து அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. அவரது புகாரை நீதிமன்றத்தில் முறைப்படி சந்திப்போம் என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals




New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory