» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு

திங்கள் 9, ஜூலை 2018 5:20:09 PM (IST)

இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா  (61). இவர் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார். அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. 

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்  தனது சொத்துக்களை தர தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் லண்டனில் இருக்க கூடிய சொத்துக்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை தன் தாயார் மற்றும் குழந்தைகளின் சொத்து என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 

தன்னுடைய பெயரில் சில கார்களும், நகைகள் மட்டுமே இருப்பதாகவும், நேரம் அறிவித்துவிட்டு, வீட்டுக்கு வந்தால்,  அதை தர தான் தயாராக இருப்பதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.  இந்தியாவை பொறுத்தவரை தாம் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என்று விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.  


மக்கள் கருத்து

நிஹாJul 11, 2018 - 10:23:33 AM | Posted IP 162.1*****

அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது தாங்கள் தானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors






Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory