» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழ் மாணவருக்கு ஷார்ஜா அரசின் விருது : பட்டத்து இளவரசர் வழங்கினார்

திங்கள் 18, ஜூன் 2018 5:20:36 PM (IST)



​​ஆதித்ய ஷர்மா என்ற தமிழ் மாணவர்,  இந்த விருதை ஷார்ஜா ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும், துணை ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முகம்மது சுல்தான் அல் காசிமி வழங்கி கௌரவித்தார்.

துபாயில் உள்ள அவர் ஓன் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் படிப்பில் அதிக ஆர்வமுடன் திகழ்ந்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமல்லாது, பழைய மொபைல் போன்களை சேகரித்து அதனை சுற்றுச்சூழல் அமைப்பில் ஒப்படைத்து வருகிறார். இதன் காரணமாக பழைய மொபைல் போன்கள் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. அபாகஸ் எனப்படும் கணிதத்திறமையில் வல்லமையுடையவராக திகழ்ந்து வருகிறார். இதில் பத்து லெவல் வரை இந்த அபாகஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதன் காரணமாக எத்தகைய எண்களை கொடுத்தாலும் அதனை மனப்பாடமாக எளிதில் விடை கொடுக்கும் திறமையை பெற்றுள்ளவர் ஆவார். ஆஸ்திரேலியா கல்வி கவுன்சில் தேர்வுகளிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் நடந்த வினாடி வினா போட்டியிலும், அமீரக அளவில் நடந்த வினாடி வினா போட்டியிலும் அதிகமான பரிசுகளை பெற்றுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் உலக அளவிலான கல்வி குறித்த விளையாட்டுப் போட்டியில் 3,148.14 புள்ளிகள் பெற்று அமீரக மாணவர்களிலேயே முக்கிய இடத்தை பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்து வருகிறது. இவரது பெற்றோர் ஸ்ரீராம் சர்மா மற்றும் ஹேமாவ​தி ஆகியோர் ஆவர். இதுபோன்ற பணிகளின் மூலம் சமூகத்தில் ஒரு முன்மாதிரி குடிமகனாக இருக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என ​​ ​ஆதித்ய ஷர்மா  தெரிவித்தார்.
 
இந்த ஆர்வம் காரணமாக இவரது சகோதரர் அமித் சர்மா பல்வேறு திறமைகளை கொண்டு இருந்து வருகிறார். இதற்காக அவர் இளைய சுற்றுச்சூழலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் படங்கள் வரைவதில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளார். விருது பெற்ற மாணவருக்கு ஈமான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் முபாரக் முஸ்தபா, இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியர் முனைவர் சே.மு.மு. முகமதலி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications


Nalam Pasumaiyagam

New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes




Thoothukudi Business Directory