» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு டிரம்ப் உறுதி: வட கொரியா அதிபர் தகவல்!!

புதன் 13, ஜூன் 2018 5:41:08 PM (IST)

வடகொரியா மீதான பொருளாதார தடையை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கூறினார். 

அதிபர் கிம் ஜோங்-உன் நாடு திரும்பிய பின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட அறிக்கையில் தென் கொரியாவில் அமெரிக்க இராணுவ பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், பியோங்யாங்கிற்காக டிரம்ப் விதிமுறைக்கப்பாற்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கி உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகள் தங்களது அணுசக்தி ஆயுதங்களை கைவிடும் வரை, பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து சற்று முரன்பட்டுள்ளது. அதாவது வட கொரியா முதலில் அணுசக்தித் துறையை முழுமையாக கைவிட வேண்டும். அல்லது போதுமான அளவில் சில நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

நேற்றைய சந்திப்பின் போது டிரம்ப் சில விசயங்களை வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கொரிய தீபகற்பத்தின் முழுமையான அணுசக்திக்கு முன்னரே" -இது இரு தரப்பினரிடமும் வரையறுக்கப்பட்டுவிட்டால்-சரிபார்க்கப்பட வேண்டும்.விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

வட கொரிய பொருளாதார முன்னேற்றத்தை பற்றி, அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனினும், கிம் ஜாங் உறுதியளித்த நடவடிக்கைகளின் போக்குக்கு ஏற்ப, அவர்களுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவும். இளம் தலைவரான கிம் ஜாங், மிகச் சிறந்த புத்திசாலி. அவரிடம் அதிக திறமை உள்ளது. சரியான நேரத்தில், அவருக்கு, வெள்ளை மாளிகை வரும்படி அழைப்பு விடுக்கப்படும்.

அணு ஆயுத கொள்கை குறித்து, தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமும், அமெரிக்கா பேச்சு நடத்தும். கிம் ஜாங் உடனான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட, மிகச் சிறப்பாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் குறித்து, இருவரும் முக்கிய பேச்சு நடத்தினோம். அதில் சில உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



New Shape Tailors


crescentopticals

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory