» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விஜய் மல்லையாவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் மோசடி மன்னன் நிரவ் மோடி!!

திங்கள் 11, ஜூன் 2018 12:49:24 PM (IST)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் கோரி அணுகியுள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதுபோலவே, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது. 

நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிரவ் மோடி ஜனவரி மாதமே இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்று விட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் சென்று விட்டனர். லாவேசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்றவர் பின்னர் நாடு திரும்பிவில்லை. அவர் அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடும் என முதலில் தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் லண்டனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சூழலில், நீரவ் மோடி இங்கிலாந்திடம் அடைக்கலம் அளிக்குமாறு கோரியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக தான் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் தனக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதுபற்றிய தகவல்கள் எதையும் அந்நாட்டு உள்துறை அலுவலம் எதையும் வெளியிடவில்லை. தனிநபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என கூறிவிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, லண்டனில் தங்கியுள்ள நிலையில் அங்கு அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது மற்றொரு தொழிலதிபரான நிரவ் மோடியும் அடைக்கலம் கேட்டு இங்கிலாந்து அரசை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



New Shape Tailors


crescentopticals


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory