» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் அதிபருடன் கை குலுக்கி பேசிய பிரதமர் மோடி

ஞாயிறு 10, ஜூன் 2018 10:37:46 PM (IST)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டு அரங்கில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைனிடம் சிரித்தபடி கையை குலுக்கி பேசினார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

பாகிஸ்தானில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால அரசு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் மம்னூன் உசைன் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு முடிந்த பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சமையத்தில் மம்னூன் உசைன் - மோடி இருவரும் சிரித்தபடி கையை குலுக்கினர். பின்னர், இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். இதனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் அருகில் நின்று சிரித்துக்கொண்டு பார்த்தார்.  பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இரு தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



Thoothukudi Business Directory