» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா பயணம்: ஷங்காய் மாநாட்டில் பங்கேற்கிறார்!!

சனி 21, ஏப்ரல் 2018 5:48:11 PM (IST)

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சீனா, மங்கோலியா நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியையொட்டி கடந்த ஆண்டில் சீனா சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனையடுத்து, இந்திய ராணுவம் அங்கு படைகளை அதிரடியாக குவித்தது. இதற்கு பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறிய சீனா தங்களது ராணுவத்தினரையும் எல்லையில் குவித்தது. 

இருநாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் போர்ப்பதற்றத்தை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் கருத்து மோதல்கள் பதற்றத்தை மேலும் வலுவாக்கின.  பின்னர், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்கி பேசினர். இதனால் போர்பதற்றம் சற்று தணிந்தது. 

இதற்கிடையில், இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று ஷங்காய் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தின்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை சந்திக்கும் சுஷ்மா, தோக்லாம் எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மங்கோலியா நாட்டுக்கு செல்லும் அவர் அங்கு இருநாட்கள் தங்கி இருந்து இந்தியா-மங்கோலியா இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory