» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கலிபோர்னியாவில் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் மாயம்: பெண்ணின் உடல் மீட்பு

திங்கள் 16, ஏப்ரல் 2018 11:21:03 AM (IST)



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சவுமியாவின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வழியில் மாயம் ஆனார்கள். 6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 

இதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இப்போது கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13-ந் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும் சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.

அந்தப் பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் படையினர் கூறினர். அதே நேரத்தில் அவை ஏல் நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிற சந்தீப் குடும்பத்தினருடையதுதான் என அவர்கள் உறுதி செய்தனர். சந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes




Anbu Communications

New Shape Tailors


Joseph Marketing



Thoothukudi Business Directory