» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எத்தியோப்பா நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து : முப்பத்தெட்டு பேர் பரிதாப பலி

செவ்வாய் 13, மார்ச் 2018 8:32:07 PM (IST)

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலம் லேகம்போ மாவட்டத்தில் செவ்வாயன்று டெஸ்சி மற்றும் மெக்கானே நகரங்களுக்கு மத்தியில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து திடீரென்று நிலை தடுமாறி அருகிலிருந்த பெரும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு ள்ளானது.இந்த விபத்தில் 28 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிவேகத்தில் வந்த பேருந்தானது சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்து விட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.காயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர்  மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

CSC Computer Education


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing



Thoothukudi Business Directory