» செய்திகள் - விளையாட்டு » உலகம்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் கைது : பாகிஸ்தானில் பரபரப்பு

திங்கள் 12, மார்ச் 2018 10:46:26 AM (IST)

பாகிஸ்தான் மதரஸாவில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாகிஸ்தானில் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. சியால்கோட் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் பேசிய போது அவர் மீது மை வீசப்பட்டது. மை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவருடன் எனக்கு எந்தஒரு தனிப்பட்ட விரோதமும் கிடையாது, அவருடைய பணியை அவர் செய்யட்டும், அவரை விட்டுவிடுங்கள் என கவாஜா ஆசிப் கேட்டதும் போலீசார் நடவடிக்கையை தவிர்த்தனர். நாரோவால் பகுதியில் பேசிய உள்துறை அமைச்சர் இக்பாலை நோக்கி காலணி வீசப்பட்டது.

இந்நிலையில் லாகூரில் முப்தி முகமது உசேன் நயீமி என்ற மத குருவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துக்கொண்ட போது அதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு அவர் மேடையில் ஏறியபோது, அவரை நோக்கி பார்வையாளர்களில் ஒருவர் காலணியை வீசினார். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காலணி வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று மடக்கிப்பிடித்தனர். அவரை போலீசார்வசம் ஒப்படைத்தனர். 

நிகழ்ச்சியில் திட்டமிட்டபடி, நவாஸ் ஷெரீப் பேசினார். அவர் தனது பேச்சை சுருக்கிக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறிவிட்டு, பிரார்த்தனை செய்து விட்டு பேச்சை முடித்தார். நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் முன்னாள் மாணவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நவாஸ் ஷெரீப் மீதும் காலணி வீசப்பட்டிருப்பது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailorscrescentopticals


Joseph MarketingThoothukudi Business Directory