» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை தயாரிக்கிறது : அமெரிக்க புலனாய்வு துறை

புதன் 14, பிப்ரவரி 2018 4:14:38 PM (IST)

பாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் செய்து வருகிறது. குறிப்பாக குறுகிய தூரத்தை தாக்கும் வகையில் புதுவகையான அணு ஆயுதங்களை அந்நாட்டு உற்பத்தி செய்து வருவது அந்த பிராந்தியத்துக்கு ஆபத்து என்று அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்க செனட் காங்கிரஸ் விசாரணை குழுவிடம் அந்நாட்டு புலனாய்வு பிரிவின் இயக்குனர் டான்  கோட்ஸ் கூறியதாவது: 

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. மேலும் புதுவகையான அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருகிறது. இதுதவிர கடலிருந்து மற்றும் வானிலிருந்து ஏவும் ஏவுகணைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அந்நாட்டு தயாரித்து வருகிறது. பாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை அறிமுகம் செய்தால் அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பும் மற்றும் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers

crescentopticals


New Shape Tailors





Thoothukudi Business Directory