» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தேம்ஸ் நதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது: லண்டன் நகர விமான நிலையம் மூடல்

திங்கள் 12, பிப்ரவரி 2018 12:36:28 PM (IST)



இங்கிலாந்தில் தேம்ஸ் நதியில் இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட வெடிக்காத 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் நேற்று இரவு மூடப்பட்டது.

இங்கிலாந்தில் லண்டன் நகரில் தேம்ஸ் நதி பாய்ந்தோடுகிறது. இந்த நதியில் ஜார்ஜ் வி டாக் உள்பட 3 முக்கிய கப்பல் துறைகள் உள்ளன. ஜார்ஜ் வி டாக் கப்பல் துறையில் நேற்று இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட 2 வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து லண்டன் நகர விமான நிலையம் நேற்று இரவு மூடப்பட்டது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று விமான நிலைய வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து லண்டன் மாநகராட்சி காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தேம்ஸ் நதியின் ஜார்ஜ் வி டாக் கப்பல் துறை பகுதியில் இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட வெடிக்காத 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது.வெடிகுண்டுகளை அகற்றும் பணி இங்கிலாந்து கப்பற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய 214 மீட்டர் தூரத்துக்கு விலக்கல் மண்டலம் அமல்படுத்தப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads




Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals




Thoothukudi Business Directory