» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலஸ்தீனம் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி: ரமல்லா நகரில் சிறப்பான வரவேற்பு

சனி 10, பிப்ரவரி 2018 4:13:20 PM (IST)
அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டானில் இருந்து பாலஸ்தீனம் சென்றடைந்தார்.  பிரதமர் மோடிக்கு ரமல்லா நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார். மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக நேற்று ஜோர்டான் சென்றார். அந்நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவை சந்தித்த மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜோர்டான் பயணத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து இன்று காலை தனி விமானத்தில் மோடி பாலஸ்தீனம் சென்றார். பிரதமர் மோடிக்கு ரமல்லா நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாலஸ்தீனத்தில் முக்கிய சந்திப்புகளை முடித்துக் கொண்டு இன்று மாலையே ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல உள்ளார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மாக்தெளம், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நயான் ஆகியோரை மோடி சந்திக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து துபை நகரில் அரசு சார்பில் நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். துபை நகரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். அவர்களிடம் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதை எடுத்துக் கூறும் அவர், இரு தரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

பின்னர், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) மாலை ஓமன் நாட்டுக்கு மோடி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமராக மோடி ஓமன் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு ஓமன் சுல்தான் அரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிறகு, அங்கிருந்து 12-ஆம் தேதி தாயகம் திரும்புகிறார். மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவே பிரதமர் மோடி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Joseph Marketing

CSC Computer Education

New Shape TailorsNalam PasumaiyagamThoothukudi Business Directory