» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஆதரவு

செவ்வாய் 9, ஜனவரி 2018 9:12:45 AM (IST)

நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றார். முன்னதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கையில் இருந்து தன்னுடைய முதல் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

அடேய் சோழமுத்தாJan 11, 2018 - 01:30:37 PM | Posted IP 117.2*****

நீ போய் இலங்கை ல அரசியல்பன்னு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Johnson's Engineers

Universal Tiles Bazar



New Shape Tailors



selvam aqua



Thoothukudi Business Directory