» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வடகொரியா தலைவருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

திங்கள் 8, ஜனவரி 2018 11:59:12 AM (IST)

வடகொரியா தலைவருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அதிபர்  டிரம்ப் அறிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து அணுக்குண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தும் வருவது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர்  டிரம்புக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மேரிலாந்து மாகாணத்தின் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் உள்ள அதிபர்  ஓய்வு மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், நீங்கள் இப்போது கிம் ஜாங் அன்னிடம் தொலைபேசியில் நேரடியாக பேசுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நிச்சயமாக பேசத்தயார். பேச்சு வார்த்தையில் எப்போதுமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். தற்போது அவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பேச்சு நடந்த முன்வந்துள்ளனர். 

இது மிகப்பெரிய தொடக்கம். நமக்கு இதில் தொடர்பு இல்லை என்று சொன்னால், அவர்கள் இப்போது குளிர்கால ஒலிம்பிக் பற்றி பேச மாட்டார்கள். நான் குழப்பத்தில் இல்லை என்பதை அவர் அறிவார் என பதில் அளித்தார். மேலும், வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுடன் கலந்து பேசி நல்லதொரு அமைதித் தீர்வினை காண வேண்டும். இன்னும் பலருடன் கலந்து பேச வேண்டும். இதில் நல்லது நடந்தால் அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கே மிகப்பெரிய செயலாக அமையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து

உண்மைJan 8, 2018 - 02:27:53 PM | Posted IP 122.1*****

வாங்க MR.BEEN'S

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua



New Shape Tailors


Johnson's Engineers



Universal Tiles Bazar







Thoothukudi Business Directory