» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என ஆசை : மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு

ஞாயிறு 7, ஜனவரி 2018 10:33:27 AM (IST)

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை என மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேசினார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். 

கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  விழாவில் நடிகர் ரஜினிகாந்த்-கமலஹாசன் உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். 

கலை நிகழ்ச்சியில் ரஜினி ரஜினிகாந்த் பேசியதாவது: என்னை வாழவைத்த தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை. நான் சிறுவயதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பட்டோடி. இந்திய வீரரில் தோனியை பிடிக்கும், ஆனால் எப்போதும் எனக்கு பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Friends Track CALL TAXI & CAB (P) LTD




Johnson's Engineers


crescentopticals




Thoothukudi Business Directory