» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை அமைக்கிறது சீனா அரபிக் கடலில் கோலோச்ச நடவடிக்கை!!

சனி 6, ஜனவரி 2018 12:14:53 PM (IST)

பாகிஸ்தானில் டிஜிபோயுடி கடற்படை தளத்தை அடுத்து தனது 2-வது கடற்படை தளத்தை சீனா அமைக்கிறது.

சீனாவும் பாகிஸ்தானும் தீவிர நட்பு  நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானில் டிஜிபோயுடி என்ற இடத்தில் சீனா  கடற்படை தளம் அமைத்துள்ளது. இந்திய  பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. இங்கு கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக  கூறி தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் 2-வது  கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. பலுசிஸ்தானத்தில் உள்ள  ஜிவானி தீபகற்பத்தில் கவுதாரில்  இத்தளம் கட்டப்படுகிறது. இது ஈரானின்  சபாகர் துறை முகத்தின் அருகில் அமைகிறது. சபாகர் துறைமுகம் ஈரான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எற்றுமதி வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது. தற்போது ஜிவானியில் கட்டப்படும் கடற்படை தளம் சீனா-பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமான படை தளமாக பயன்படுத்தப்பட உள்ளது.

ஜிவானி கடற்படை தளம் அமைத்து இத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மும்பைக்கு எதிராக  அரபிக் கடலில் கோலோச்ச சீனா முடிவு  செய்துள்ளது. இதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு செய்தி யில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அமெரிக்க  ஓய்வுபெற்ற இராணுவ ரிசர்வ் கேர்னல் லாரன்ஸ் செலின்  கூறும் போது சீன மற்றும் பாக்கிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கிடையே ஒரு கூட்டத்தில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads
crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


New Shape TailorsThoothukudi Business Directory