» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா நிதியுதவியை நிறுத்த இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் குற்றச்சாட்டு

வெள்ளி 5, ஜனவரி 2018 5:04:17 PM (IST)

இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது புத்தாண்டு செய்தியில் தீவிரவாதிகளை அழிப்பதாக பாகிஸ்தான் பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி பெற்றுள்ளது என குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.7,500 கோடி நிதி உதவியை நிறுத்தியுள்து. இதற்கு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம்  சாட்டியுள்ளது. 

டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு குழு  கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப்  கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துக்களை தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது” என அபாண்டமாக குற்றம் சாட்டினார்.


மக்கள் கருத்து

உண்மைJan 10, 2018 - 06:06:07 PM | Posted IP 122.1*****

ஜெய் மோடி சர்க்கார்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory