» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு - 2பேர் கைது

புதன் 6, டிசம்பர் 2017 10:35:37 AM (IST)

இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் தெரசா மே.  இவரை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 28ந்தேதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.  

அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (21) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டெர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசாவை கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 9 சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்று தெரசாவின் செய்தி தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors





Johnson's Engineers


crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory