» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 6 முஸ்லிம் நாடுகளுக்கு தடை: டிரம்பின் உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

செவ்வாய் 5, டிசம்பர் 2017 9:11:23 AM (IST)

டிரம்பின் 6 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்க பயண தடை என்ற உத்தரவை முழு அளவில் செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். இந்நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள டிரம்ப் தடை விதித்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நாடுகளில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர்.  டிரம்பின் இந்த முடிவு முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.  எனினும் அவர் தனது முடிவை செயல்படுத்துவதில் தீவிரமுடன் இருந்துள்ளார். இதனிடையே டிரம்பின் பயண தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை வழங்கி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர், டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers



New Shape Tailors


selvam aqua

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory