» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச அளவில் அதிக நம்பிக்கையை பெற்ற அரசாங்கம்: மோடி அரசுக்கு மூன்றாவது இடம்!!

செவ்வாய் 21, நவம்பர் 2017 11:36:44 AM (IST)

சர்வதேச அளவில் அதிக நம்பிக்கையை பெற்ற அரசாங்கங்கள் பட்டியலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 

பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) சமீபத்தில் நடத்திய சர்வதேச ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்திருப்பது குறித்து உலக பொருளாதார மையம் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் மிகவும் நம்பிக்கையான அரசாங்கங்களுள் பிரதமர் மோடி தலைமையிலான அரசும் இடம் பெற்றிருக்கிறது. கடந்த மூன்று காலாண்டுகளாக இந்திய மக்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை கூடியிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் ஊழலுக்கு எதிர்ப்பு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் வரி சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கையை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. கிட்டத்தட்ட 74 சதவீத இந்திய மக்கள் மோடி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கின்றனர் என்று உலக பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாட்டு மக்கள் மத்திய அரசின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையை இழந்திருந்தனர். ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் கொண்டு வந்த கொள்கைகள் மற்றும் அவரின் ஆளுமை மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒவ்வொரு இந்தியனும் நரேந்திர மோடி தலைமையின் கீழ் புதிய இந்தியாவை பார்த்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று காலாண்டுகளாக 74 சதவீத இந்தியர்கள் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாக ஆய் வில் தெரியவந்துள்ளது. ஓஇசிடி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தோனேசியாவும் மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை, ஊழல் தன்மை, அரசியல் கிளர்ச்சி போன்ற படிநிலைகளை வைத்து சர்வதேச அளவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாங்கங்கள் பட்டியலில் சிலி, பின்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் குடிமக்களின் நம்பிக்கையை பெற அதிக சீர்திருத்தங்களை செய்ய வேண்டியிருப்பதாக ஓஇசிடி கூறியுள்ளது. மேலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பொதுச் சேவைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியிருக்கிறது.


மக்கள் கருத்து

ராஜ்Nov 22, 2017 - 09:50:59 AM | Posted IP 124.3*****

நல்ல பாருங்க 174 % ஆ இருக்கப்போகுது ஏன்டா கதைவிடுறதுக்கும் அவரு அளவு வேணாமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Joseph Marketing

Thoothukudi Business Directory