» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வழங்க சுவிஸ் அரசு ஒப்புதல்!!

திங்கள் 20, நவம்பர் 2017 11:03:11 AM (IST)

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்து வந்த தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்துக்கு ஸ்விஸ் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ஸ்விஸ் அரசுக்கும், இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு ஸ்விஸ் நாடாளுமன்றத்தின் கீழவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஸ்விஸ் நாடாளுமன்ற மேலவையின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரி விதிப்புக் குழு, இந்த ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை விவாதித்துள்ளது. 

அப்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் தனி நபர் சட்டப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஸ்விஸ் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. அந்த ஒப்பந்தம், வரும் 27-ஆம் தேதி தொடங்கும் ஸ்விஸ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, மேலவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

மேலவை ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த ஆண்டு முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அதையடுத்து, இந்தியா- ஸ்விட்சர்லாந்து இடையே முதல் கட்ட விவரங்கள், வரும் 2019-ஆம் ஆண்டு பகிர்ந்து கொள்ளப்படும். அதன்படி, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர், அவர்களின் வங்கிக் கணக்கு எண்கள், முகவரி, பிறந்த தேதி, வங்கியில் உள்ள தொகை ஆகியவை பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு ஸ்விஸ் அரசு அனுப்பி வைக்கும்.

உதாரணமாக, ஸ்விஸ் வங்கியில் இந்தியர் ஒருவர் வங்கிக் கணக்கு தொடங்கினால், அந்த வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை ஸ்விஸ் அரசுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பி வைக்கும். அதையடுத்து, அந்த விவரங்களை இந்திய அரசுக்கு ஸ்விஸ் அரசு அனுப்பி வைக்கும். அந்த விவரங்களைக் கொண்டு இந்திய அரசு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்கவும், எல்லை தாண்டிய வரி ஏய்ப்பைத் தடுக்கவும், இந்தியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

NomanNov 21, 2017 - 07:18:49 PM | Posted IP 82.19*****

Just this is an announcement, Nothing came... We are getting news like this very frequently, may be this also an eyewash.. Vayilaye nanna vada suduva..

போங்க தம்பிNov 21, 2017 - 05:38:46 PM | Posted IP 122.1*****

மோடி தான் முதல் ஆள்

உண்மைNov 20, 2017 - 02:05:50 PM | Posted IP 122.1*****

நன்றி மோடி அரசு! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorsJoseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticalsThoothukudi Business Directory