» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தற்கொலைப் படை தீவிரவாதியை கட்டிப்பிடித்து பல உயிர்களை காப்பாற்றிய போலீஸ்

சனி 18, நவம்பர் 2017 2:25:30 PM (IST)

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தீவிரவாதியை கட்டிப்பிடித்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து, உயிர் தியாகம் செய்து, பல உயிர்களை காப்பாற்றிய அந்த நாட்டின் இளம் போலீஸ்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு பிரபல ஓட்டலில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, பாதுகாப்பு வளையத்தையும் மீறி தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் ஓட்டலுக்குள் செல்ல முயற்சித்தார். இதை அறிந்து கொண்ட போலீஸ்காரர் பாசம் பாச்சா (25), அந்த தற்கொலைப் படை தீவிரவாதியை உள்ளே நுழைய விடாமல் தடுத்து தன்னுடன் அணைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இவரது தியாகத்தால் பல உயிர்களை காப்பாற்றினர். இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் உள்பட பல்வேறு உலக நாடுகள் இந்த செய்தியை வெளியிட்டு இளம் போலீஸ்காரரின் தியாகத்தை பாராட்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

New Shape Tailors


Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory