» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி : பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம்

சனி 11, நவம்பர் 2017 10:26:01 AM (IST)

இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
வியத்நாம் நாட்டில் உள்ள டனாங் நகரில், ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். இதனையடுத்து, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த தொழில்துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்திலும் டிரம்ப் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:  உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய - பசிபிக் பிராந்தியம் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தப் பிராந்தியம் அனைவருக்கும் பொதுவானதாகவும், தடையின்றி தொழில் மேற்கொள்ளும் இடமாகவும் விளங்க வேண்டும். 

இந்தப் பிராந்தியத்தைப் பொருத்தவரை, நாம் அனைவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருகிறோம். இந்த நல்லுறவு என்றைக்கும் நீடித்திருக்க வேண்டும். அதுவே நம் அனைவருக்கும் நல்லது. இந்தத் தருணத்தில், இந்திய - பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வரும் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. மேலும், அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார் என்றார் டொனால்ட் டிரம்ப்.


மக்கள் கருத்து

உண்மைNov 15, 2017 - 02:13:47 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

M.RamanathaboopathiNov 11, 2017 - 02:14:36 PM | Posted IP 122.1*****

ஆமா மக்களை எப்போதும் பீதியில் வைத்துஇருப்பது ஒரு ஒருங்கிணைப்பு தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Johnson's Engineers

CSC Computer Education

Sterlite Industries (I) Ltd

New Shape Tailors


Universal Tiles Bazar


selvam aqua



Thoothukudi Business Directory