» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொழுதுபோகாததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொன்ற செவிலியர்!

வெள்ளி 10, நவம்பர் 2017 3:57:23 PM (IST)ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் விஷ ஊசி போட்டு நோயாளிகள் 106 பேரை கொலை செய்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருவதாக  விசாரணை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஜெர்மனியை சேர்ந்த ஆண் நர்ஸ்  நீல்ஸ் ஹோகேல் (41)  வடக்கு நகரமான  பிரீமெனின் நகரில் டெல்மேன்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஆழ்ந்த கவனிப்பு நோயாளிகள் மீது உடல் தீங்கு விளைவிக்கும் மருந்துகளை ஏற்றி இவர் ஏற்கனவே 2015 இல் இரண்டு கொலைகள் மற்றும் நான்கு கொலை முயற்சிகளை செய்ததாக  இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது

தொடர்ந்து நடந்த விசாரணையில் நர்ஸ்  ஹோகேல்  900க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொலை செய்து உள்ளதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனிடையே வியாழனன்று போலீசார் வெளியிட்ட தகவலில் மேலும் 16 நோயாளிகளின் சாவில் ஹோகேல் சம்பந்தபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேலும் விவரங்களை  திரட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹோகேல் மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாகும் தருவாயில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றினால், மருத்துவமனையில் தனக்கு மரியாதையும் புகழும் கிடைக்கும் என ஹோகேல் நம்பியுள்ளார். இதற்காக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் மருந்தை அதிக அளவில் அவர் செலுத்தி உள்ளார்அவ்வாறு செலுத்தப்பட்ட நோயாளிகளில் சிலரை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்துள்ளது. 

பலர் உயிரிழந்த போதும் தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹோகேல் தொடர்ந்து இதே மாதிரி வேறு நோயாளிகளுக்கும் செய்து வந்துள்ளார்.1999 முதல் 2005 வரையான காலகட்டத்தில் ஹோகேல் பணிபுரிந்த இருவேறு மருத்துவமனைகளில் மொத்தம் 106 நோயாளிகளின் சாவுக்கு ஹோகேல் காரணமாகி உள்ளார். தற்போது மேலும் 5 உடல்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உடுபடுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொலை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

பாலாNov 15, 2017 - 04:41:08 PM | Posted IP 117.2*****

இந்தியாவை குறை சொல்பவர்களுக்கு இது சாட்டை அடி!

உண்மைNov 15, 2017 - 02:25:33 PM | Posted IP 122.1*****

ஏதோ ஒரு நாய் ஜெர்மன் தயாரிப்பு சூப்பர்-னு சொன்னானே? இதையும் சேர்த்துதான் சொன்னியாடா?

உண்மைNov 15, 2017 - 02:14:15 PM | Posted IP 122.1*****

என்ன இருந்தாலும் வெளிநாடு வெளிநாடுதான்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


CSC Computer Education

New Shape Tailors


Universal Tiles Bazar

Johnson's Engineers


selvam aqua


Nalam PasumaiyagamThoothukudi Business Directory