» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க ரூ.3.2 கோடி நிதி: அமெரிக்கா அறிவிப்பு

வெள்ளி 10, நவம்பர் 2017 12:40:44 PM (IST)

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், மத அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார்ரூ.3.2 கோடி பரிசளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஜனநாயக, மனித உரிமை மற்றும் தொழிலாளர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மதச் சுதந்திரத்தை அதிகரிப்பதற்கான சிறந்த செயல்திட்டங்களைக் கூறும் தொண்டு நிறுவனங்களுக்கு பரிசுத் தொகைகளை அளிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

மத அடிப்படையில் நிகழும் வன்முறைகளையும், பாரபட்ச நடவடிக்கைகளையும் குறைப்பதற்கான சிறந்த யோசனைகளை அளிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்தப் பரிசுத் திட்டம் குறித்து விசாரித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை கூறுகையில், "இந்தியாவில் மத சகிப்புத் தன்மையை மேம்படுத்த அமெரிக்கா அறிவித்துள்ளதாகக் கூறப்படும் பரிசுத் திட்டம் குறித்து மேலும் விவரங்களைக் கோரியுள்ளோம். இந்தியாவில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றாலும், அது இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



New Shape Tailors

Joseph Marketing




Thoothukudi Business Directory