» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை: டிரம்ப் - ஜீ ஜின்பிங் உறுதி

வெள்ளி 10, நவம்பர் 2017 10:37:18 AM (IST)



தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்கவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபூண்டனர்.

சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். பேச்சுவார்த்தையின்போது, இரு தலைவர்களும் பயங்கரவாதம் மற்றும் தெற்காசியப் பகுதியில் அமைதியையும், நிலைத்தன்மையையும் நீடிக்கச் செய்வது போன்ற விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அந்த விவகாரங்களில் இரு தலைவர்களும் தங்களது ஒருமித்த கருத்தைப் பகிர்ந்துகொண்டனர்.பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொருத்தவரை, அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர ஒத்துழைப்பை அளிப்பதாக இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர் என்றார்.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கே ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். அந்த அச்சுறுத்தலுக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானில் அமைதியான எதிர்காலத்தை உறுதி செய்யவும் அதிபர் ஜீ ஜின்பிங்கும், நானும் உறுதிபூண்டுள்ளோம். தெற்காசியா குறித்து தனது புதிய கொள்கையை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த நிலையில், சீன அதிபருடனான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education


selvam aqua

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


Johnson's Engineers


Sterlite Industries (I) Ltd




Thoothukudi Business Directory