» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலை வழக்கு : மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை

ஞாயிறு 8, அக்டோபர் 2017 10:25:08 AM (IST)

தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலையில் மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர், சிபோனாகலிசோ மபிலி. மந்திரவாதி. பலேகே குமலோ என்பவரிடம் மாந்திரிக வேலைகளுக்காக ஒரு இந்தியப் பெண் அல்லது வெள்ளைக்காரப் பெண்ணின் தலையை கொண்டு வந்தால் 1 லட்சத்து 53 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.99½ லட்சம்) தருவதாக மபிலி கூறினார். இதையடுத்து பலேகே குமலோ, ஜிம்மி, முலுங்கிசி, மபலி ஆகிய 3 பேரின் துணையுடன் தேஸ்ரீ முருகன் என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி, டர்பன் அருகேயுள்ள சாட்ஸ்வொர்த் என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வந்தார்.

அங்கு வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் 192 முறை கத்தியால் சரமாரியாக குத்தி, தலையைத் துண்டித்து படுகொலை செய்தனர். 2014–ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் மந்திரவாதி மபிலிக்கும், குமலோவுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜிம்மி, முலுங்கிசி ஆகியோருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், மபலிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.  இந்த தீர்ப்பை அங்குள்ள இந்திய சமூகத்தினர் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals




Thoothukudi Business Directory