» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சனி 7, அக்டோபர் 2017 10:17:55 AM (IST)இலங்கையில் மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. 

இலங்கையில் அம்பாந்தோட்டை என்ற இடத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகம் முன்பு நீதிமன்ற தடையை மீறி நேற்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போதும் அவர்கள் கலையாததால் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இந்த விமான நிலையம் சீனாவிடம் கடன் பெற்று ராஜபக்சே ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால் இதை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதை அனுமதிக்க மாட்டோம் என்றனர்.


மக்கள் கருத்து

உண்மைOct 7, 2017 - 12:36:46 PM | Posted IP 122.1*****

விரைவில் இலங்கை இந்திய வசம் ஆகும்! ராமர் பாலம் போன்று மீண்டும் அமைப்போம்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsJoseph MarketingThoothukudi Business Directory