» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே நேரத்தில் தாயும் மகளும் குழந்தை பெற்றெடுத்த அதிசயம் ... துருக்கியில் உலக சாதனை!

வெள்ளி 6, அக்டோபர் 2017 12:03:05 PM (IST)துருக்கிய மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில், தாயும் அவரது மகளும் குழந்தை பெற்றெடுத்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி (42), அவரது மகள் காதா பிரின்சி (21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது உலகிலேயே இதுதான் முதன்முறை என்ற மருத்துவர்கள், மருத்துவத் துறையில் இது ஒரு அதிசயம் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர் சூட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

மக்கள்Oct 6, 2017 - 01:31:26 PM | Posted IP 122.1*****

என்ன ஒரு உலக அதிசயம்...பிறந்த குழந்தைகளுக்கு பாதர் வேறு வேறா இல்லை ஒரே பாதரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


Joseph Marketing
New Shape Tailors
Thoothukudi Business Directory