» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் பயங்கரவாத தாக்குதல்: லண்டன் சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு!!

வெள்ளி 15, செப்டம்பர் 2017 5:56:23 PM (IST)இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

உள்ளூர் நேரப்படி காலை நேரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். சத்தம் கேட்டு அலறிய பொதுமக்கள், தங்களைக் காப்பாற்றி கொள்ள ஓடினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பை தொடரந்து சுரங்க ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாத செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நிகழாண்டு நான்காவது முறையாக பயங்கரவாத தாக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐஈடி எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக லண்டன் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். சுரங்க ரயில் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. 

காயம் அடைந்தவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்தை லண்டன் நகர போலீசார், பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸ், ஸ்காட்லாந்து யார்டு படையினர் இணைந்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு வரவேண்டாம் என்று பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் லண்டனில் மூன்று முறை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 36 பேர் பலியாகியுள்ளனர். 


மக்கள் கருத்து

ஒருவன்Sep 20, 2017 - 08:54:34 PM | Posted IP 117.2*****

பொய் அவர்களுக்கு .. செம காமெடியா இருக்கே

பொய்Sep 19, 2017 - 12:27:52 PM | Posted IP 37.21*****

எவனொருவன் பிற நாட்டில் பிச்சையை எடுத்து சாப்பிடுகிறானோ எவனொருவன் பிற நாட்டு கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்துகிறானோ அவன் அப்போதே வேரறுக்க பட வேண்டியவன்.

உண்மைSep 18, 2017 - 12:38:52 PM | Posted IP 122.1*****

எவனொருவன் தாய்நாட்டின் மீது பற்றுக்கொள்ளாமல் பிற நாட்டிற்கோ கலாச்சாரத்திற்கோ சிங்கி தட்டுகிறானோ! அவன் அன்றே வேறருக்க படவேண்டியவன்!

கம்ப்யூட்டர் பொறியாளர்Sep 18, 2017 - 08:12:50 AM | Posted IP 61.3.*****

அது மட்டுமல்ல, அப்பாவி சிறுவயது பெண்களையும் கூட விடமாட்டார்கள் ஐ எஸ் பண்ணிகள் மாறு வேடத்தில் வரும் அகதிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்பி விட வேண்டும் ..

ஜெ ஜெSep 17, 2017 - 11:05:10 PM | Posted IP 37.21*****

பிழைக்க வந்தவர்களுக்கு குடியுரிமை அளித்தால் இந்த மாதிரிதான் நடக்கும். வேலைக்கு போனவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலம் வரை இங்கு வசிக்கலாம் என்ற நிலையில் இருந்தால் இப்படி நடக்காது. இந்த விஷயத்தில் Middle East நாடுகள் நல்ல நிலையை கடைபிடிக்கிறார்கள். அவர்களை follow பண்ணவேண்டும். அமெரிக்கா விசா, கனடா விசா, UK விசா என்றால் இப்படித்தான் நடக்கும். இதுல சொல்ல ஒன்றும் இல்லை.

ஒருவன்Sep 17, 2017 - 01:26:01 PM | Posted IP 117.2*****

ஆமா. உன் தலைவன் மோடி ஊர் ஊரா சுற்றி அங்கு பிச்சை எடுக்கப் போறான் .. ... மூடிட்டு இரு ..

உண்மைSep 16, 2017 - 01:37:00 PM | Posted IP 122.1*****

என்னடா மூடர்களுக்கு வந்த சோதனை? என்னமோ சிங்கிலாந்து பெரிய புடுங்கினு சில பைத்தியம் இங்க சொல்லும்! ஹையோ ஹையோ!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Joseph Marketing


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsThoothukudi Business Directory