» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கென்யா அதிபராக கென்யட்டா மீண்டும் தேர்வு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சனி 12, ஆகஸ்ட் 2017 4:56:02 PM (IST)

கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் 54.3 சதவீதம் வாக்குகள் பெற்று உகுரு கென்யட்டா மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் உகுரு கென்யட்டா அதிபராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை யொட்டி அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிபர் கென்யட்டா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் ரெய்லா ஒடிங்கா களம் இறங்கினார். சமீபத்தில் ஓட்டு பதிவு நடந்தது. 

இதையடுத்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் 54.3 சதவீதம் வாக்குகளும், ஒடிங்காவுக்கு 44.7 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன. இதை எதிர்க்கட்சி வேட்பாளர் ஒடிங்கா ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறினார். அதை தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.கலவரத்தை அடக்கும் பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டனர்.

நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி அதிபர் கென்யட்டா வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்காவும் அமைதி காக்கும்படி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் அடங்கியது. எனவே கென்யட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் கென்யட்டா மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals



New Shape Tailors

Joseph Marketing






Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory