» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் தொழுநோயை ஒழிக்க வாழ்வை அர்ப்பணித்த ஜெர்மன் கன்னியாஸ்திரி மரணம்

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 8:58:06 AM (IST)



பாகிஸ்தானில் தொழுநோயை ஒழிக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ஜெர்மனியை சேர்ந்த கன்னியாஸ்திரி காலமானார்.

பாகிஸ்தானின் அன்னை தெரசா என அறியப்படுபவர் ரூத் கேதரீனா மார்தா ஃபாவ். கடந்த 1929ம் ஆண்டில் பிறந்த இவர் 1960ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் வசிக்க தொடங்கினார். அந்நாட்டின் கராச்சி நகரில் மேரி அடிலெய்டு தொழுநோய் மையத்தினை தொடங்கினார். இது தொழுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை. அதன்பின் நாடு முழுவதும் அதன் கிளைகளை அவர் தொடங்கினார்.

தொழுநோயை ஒழிப்பதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அவர் கராச்சி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்துள்ளார். நாட்டை தொழுநோயில் இருந்து விடுவிக்க பணியாற்றிய அவரை பற்றி பிரதமர் அப்பாசி, ஃபாவ் ஜெர்மனியில் பிறந்திருக்கலாம். அவரது இதயம் பாகிஸ்தானிலேயே எப்பொழுதும் இருந்தது என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டில் 19,398 ஆக இருந்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் 531 ஆக குறைந்துள்ளது என டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing









Thoothukudi Business Directory