» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அச்சுறுத்தல் விடுக்கும் வடகொரியா பின்விளைவை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை

வியாழன் 10, ஆகஸ்ட் 2017 9:16:46 AM (IST)

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விடுத்தால் அதற்காக கடுமையான பின்விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

உலக நாடுகள் எதிர்ப்பு, கண்டனத்ைத பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் வடகொரியா ஏவுகணைக்குள் பொருத்தும் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாளது. இதனையடுத்து வடகொரியாவிற்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூஜெர்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்காவிற்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வடகொரியா தராமல் இருப்பது சிறந்தது. நெருப்புடன் விளையாடினால் இதுவரை உலகம் பார்த்திராத கடுமையான பின்விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும். கிம் ஜாங் உன், சாதாரண அறிக்கைக்கு பின்னால் அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கிறார். இதனால் கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்” என்றார். அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கயூம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது நடுத்தர ஏவுகணை தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது, இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape Tailors





Thoothukudi Business Directory