» செய்திகள் - விளையாட்டு » உலகம்

300 கோடி பேர் ரசித்து பார்த்த ஸ்பானிஷ் பாடல் வீடியோ : யூடியூபில் புதிய சாதனை

புதன் 9, ஆகஸ்ட் 2017 6:31:25 PM (IST)



யூடியூப் தளத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோக்களில் லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டேடி யான்கீயின் டெஸ்பாகிடோ பாடல் வீடியோ முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்த வீடியோவினை 3,096,363,382 யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

யூடியூப் தளத்தில் ஜனவரி 2017-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் வீடியோ ஏழு மாதங்களில் இத்தகையே சாதனையை படைத்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டசீ யூ அகெய்ன் (See You Again) சையின் கங்கனம் ஸ்டைல் வீடியோ படைத்த சாதனையை இரண்டு ஆண்டுகளில் முறியடித்தது.இந்நிலையில், டெஸ்பாகிடோ பாடல் வீடியோ சீ யூ அகெய்ன் உள்ளிட்ட வீடியோக்களின் சாதனையை முறியடித்துள்ளது.

முன்னதாக கங்கனம் ஸ்டைல் வீடியோ யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை 2012-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தக்க வைத்திருந்தது. டெஸ்பாகிடோ பாடல் வீடியோ இந்த மாதத்தில் அதிகம் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வீடியோவாக உள்ளது.

யூடியூபில் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் டெஸ்பாகிடோ உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. ஸ்பானிஷ் மொழியில் உள்ள டெஸ்பாகிடோ பாடல் வீடியோவினை பெரும்பாலானோர் ரீமிக்ஸ் கவர் பதிப்புகளை வெளியிட, இந்த வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உலகில் யூடியூப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவு அதிகரித்து, 100 கோடிக்கும் அதிகமானோர் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து வருவது டெஸ்பாகிடோ வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் யூடியூப் VidCon 2017 எனும் விழாவில், மாதந்தோரும் 150 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தை சைன் இன் செய்து வீடியோக்களை பார்த்து வருவதாக யூடியூப் தெரிவித்தது.

யூடியூப் தளத்தில் சைன் இன் செய்யாமல் பார்ப்பவர்களும் அதிகம் ஆகும். மேலும் யூடியூப் தளத்தில் சைன் இன் செய்வோர் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தளத்தில் வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர் என யூடியூப் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers

Universal Tiles Bazar

New Shape Tailors

Nalam Pasumaiyagam





CSC Computer Education

selvam aqua



Thoothukudi Business Directory